-
மேஷம்
மேஷம்: இன்றையதினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்
யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். -
ரிஷபம்
ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த டென்ஷன், அலைச்சல் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளி
வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். -
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத் தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கன்னி
கன்னி: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.
-
துலாம்
துலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் வில கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவு வார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார் கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயமடை வீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.