நியூசிலாந்து நாடு எங்கள் கூடு, இப்போதும் எங்கள் நாட்டை நேசிக்கிறோம் என தாக்குதலுக்குள்ளான லின்வுட் மசூதியின் மதகுரு இப்ராஹிம் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
தெற்கு பசிபிக் நாட்டில் இருந்து நாங்கள் வந்திருந்தாலும் நியூசிலாந்து நாட்டை எங்கள் கூடு போன்றே நினைக்கிறோம்.
நியூசிலாந்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் எங்களுக்கு முழு ஆதரவாக இருக்கின்றனர். ஒற்றுமையாகவும் இருக்கின்றனர்.
எங்கள் குழந்தைகள் இந்த நாட்டில் தான் வாழ்கிறார்கள், நாங்களும் சொந்த தேசமாக இந்த நாட்டை பார்க்கிறோம். தற்போது முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் நியூசிலாந்து மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை யாராலும் சிதைத்துவிட முடியாது என கூறியுள்ளார்.
நியூசிலாந்து மக்கள் எங்களை கட்டித்தழுவி அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.