இந்தியா முழுவதும் தேர்தல் ஜுரம் இருக்குதோ இல்லையோ, அடுத்த வாரம் முதல் ஐபிஎல் ஜுரம் வரவுள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்காக சென்னை அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு வருகின்றனர். அணியின் கேப்டன் தோனி நேற்றே சென்னை புறப்பட்டு வர, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட மேலும் சில வீரர்கள் அணியுடன் இன்று இணைந்தனர்.
இன்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனியின் வீடியோவை சென்னை அணி தங்களுடைய சமூகவளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு அவரின் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
140 seconds of Classic #Thala Dhoni! #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/079ZXqdUaS
— Chennai Super Kings (@ChennaiIPL) March 16, 2019