நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள நேற்று மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதலில் பொதுமக்கள் 49 பேர் பலியானர் மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜோர்டான் நாட்டிலிருந்து நியூசிலாந்தில் இடம்பெயர்ந்த வஸ்ஸி அல் சால்டி மற்றும் அவரது மகளும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
வஸ்ஸி அல் சால்டி மசூதி அருகே முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். அப்பொழுது ஏற்பட்ட தாக்குதலில் வஸ்ஸியின் முதுகு புறத்தில் இரண்டு குண்டுகளும், வயிறு மற்றும் கால் பகுதியில் இரண்டு குண்டுகள் என 4 குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளன.
அதேபோல அவருடைய மகளின் உடலிலும் 3 குண்டுகள் பாய்ந்துள்ளது.இந்நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பின்னர் வஸ்ஸியின் மகள் அவரது தாயுடன் ஆக்லாந்தில் ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஓரளவிற்கு முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வஸ்ஸி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுடைய அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தவறவிடுவதற்கு மிகவும் வருந்துகிறேன். ஆனால் பதிலளிக்கக்கூடிய நிலையில் நான் தற்போது இல்லை. மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
தயவு செய்து எனக்காகவும் என்னுடைய மகளுக்காகவும் பிராத்தனை செய்யுங்கள்.
மேலும், நான் நன்றாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவினை வெளியிடுகிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவிற்கும், இதுவரை செய்த உதவிகளுக்கும் நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தயவு செய்து எனக்காகவும், என் மகளுக்காகவும் பிராத்தனை செய்யுங்கள்! ஆபத்தான நிலையில் தந்தை வெளியிட்ட நெஞ்சை உருக்கும் வீடியோ.!