இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள தடை உத்தரவு!

ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 2 மணி வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை தடை செய்யம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

பௌத்த பிக்குமார்களுக்கு காப்புறுதியை அறிமுகம் செய்ய 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமய தலைவர்களுக்கான காப்புறுதி முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

45 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு இந்தியாவின் புனித பிரதேசங்களை தரிசிப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடகளை வழங்கும்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி முக்கியத்துவம் அளிக்குமாறு குழக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

சகலருக்கும் வீடுகளை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.