தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிக்காக ஒரு வருட தணடனையை அனுபவித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அவுஸ்திரேலிய அணியினருடன் இணைந்துகொண்டுள்ளனர்
பாக்கிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிற்காக துபாய் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணியினரை சந்தித்துள்ள டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்களுடன் உரையாடியுள்ளனர்
டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார்கள் பல கேள்விகளிற்கு பதில் அளித்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு அற்புதமாகயிருந்தது என தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அணியிலிருந்து விலகயிருந்தோம் என்ற எண்ணமே தோன்றவில்லை சகவீரர்கள் மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அணிவீரர்களை நாங்கள் சந்தித்தவேளை நிறைய கட்டியணைப்புகளும் கட்டித்தழுவல்களும் இடம்பெற்றன என தெரிவித்துள்ள வோர்னர் இந்தியாவுடனான ஒருநாள் தொடர் வெற்றிக்கு பின்னர் அணியினர் மத்தியில் அதிக அதிகளவு நம்பிக்கையும் உற்சாகமும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
நாங்கள் 12 மாதங்கள் அணியில் இல்லாத தருணத்தில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன இது சிறந்த விடயம் என தெரிவித்துள்ள வோர்னர் அதனை ஏற்றுக்கொண்டு அணி முன்னோக்கி செல்வதற்கான எங்கள் கடமையை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்