நியூசிலாந்து துப்பாக்கி சூடு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த தீவிரவாதி

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் நடத்துவதற்கு சுமார் 9 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் உள்ளிட்ட 30 பேருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிக்குள் நுழைந்த Brenton Harris Tarrant அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னர் Brenton Harris தனது சமூகவலைதளத்தில், 87 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார். அவை அனைத்தும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு, முஸ்லீம் விரோத கருத்துக்களை கொண்டதாக இருந்தது.

கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியதாவது, கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை நடத்துவதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, தனக்கு உள்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்.

அந்த மின்னஞ்சலானது பிரதமரின் நேரடிப்பார்வையில் இல்லாமல் அவரது பணியாளர்கள் அந்த மின்னஞ்சலை பராமரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

எனினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணம் மற்றும் சம்பவம் நடைபெறும் இடம் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.