அதிகமுகவை மானங்கெட்டவர்கள் என்று தொடர்ந்து கூறிவந்த பாமக கட்சி தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டதான் மூலம் யார் மானங்கெட்டவர்கள் என மக்களுக்கு காட்டிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
7 தொகுதிகளை வாங்கிவிட்டு எதிர்காலத்தில் நாங்கள் தான் நாட்டை ஆளப்போகிறோம் என்று கூறுகிறார்கள்.
ன்பெல்லாம் எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் மானங்கெட்டவர்கள் என்று அன்புமணி கூறினார்.
அப்படி கூறிவிட்டு இப்போது அவர்களுடன் கூட்டணி அமைத்துவிட்டு, அவர்களின் வீட்டிலேயே சென்று சாப்பிடுகிறீர்கள். அப்படி என்றால் அன்புமணி கூறியது போல் மானங்கெட்டவர்கள் யார் என்று தெளிவாய் தெரிந்துவிட்டது.