இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமா உலர் திராட்சையை அளவில்லாமல் சாப்பிட்டால்?

நம்மில் பெரும்பாலானோர் பிடித்த வகையில் இருக்கும் உணவு பொருட்கள் அல்லது பிற பொருட்களை அதிகளவில் சாப்பிட்டுவிட்டு., அதனால் வரும் உடல் உபாதையால் அவதியுறுவது வழக்கம். அந்த வகையில்., உலர் திராட்சை அல்லது கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.

பொதுவாக உலர் திராட்சைகளை பாயசம் மற்றும் பிற சிலவகை உணவு வகைகளில் போடுவதற்காக நமது வீட்டில் வாங்கி வைப்பது வழக்கம். இந்த பழங்களை நமது கண்ணில் காட்டியவுடன் அனைத்தையும் சாப்பிட்டு விடுவோம். உலர் திராட்சைகளில் பச்சை திராட்சையை காட்டிலும் சத்துக்கள் அதிகமாக இருக்கும்.

சுமார் கால் கிண்ணம் அளவிலான உலர் திராட்சையில் 108 கலோரிகள்., 1 கிராம் அளவிலான புரதம்., 29 கிராம் அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் 1.4 அளவிலான நார்ச்சத்தும் உள்ளது. இதுமட்டுமல்லாது பொட்டாசியம்., சோடியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.

திராட்சையில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதனை உலர வைக்கும் சமயத்தில் வெகுவாக அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நமது உடலை நேரடியாக பாதிக்கும் வல்லமை கொண்டது. மேலும்., அளவுக்கு அதிகமாக இருக்கும் நார்சத்தின் காரணமாக செரிமான கோளாறு., மலச்சிக்கல் பிரச்சனை., வயிற்று வலி., வயிற்று எரிச்சல்., வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அதிகளவு இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகளின் காரணமாக செல்களின் வளர்ச்சியானது பாதிக்கப்பட்டு மோசமான விளைவையும்., செல்களின் சிதைவையும் உருவாக்கும். கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உலர் திராட்சையை சாப்பிட்டால் கருவை பாதிக்கும் பிரச்சனையும்., வயிற்று போக்கு மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும்., இரத்த அழுத்தமானது சீரற்று இயங்கி இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலமாக இரத்த நாளங்கள் அடைப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாது உடல் பருமன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டால் இதில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக நமது உடல் நலமானது பாதுகாக்கப்படும்.