சுவிஸில் மாயமான 12 வயது சிறுமி!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.

சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், குறித்த சிறுமியை மீட்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சிறுமி 165 முதல் 167 செ.மீ உயரம் கொண்டவர் எனவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மாயமான அன்று கருப்பு ஜாக்கெட், வெளிர் நீல ஜீன்ஸ் அல்லது பழுப்பு நிற உடையை அவர் அணிந்திருந்துள்ளார்.

சிறுமி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் மண்டல பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.