மலர்ந்த காதல்: நாட்டை விட்டு ஜேர்மனில் புகலிடக்கோரிக்கை!

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு புகலிடம் கோரியுள்ள லெஸ்பியன்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.

நைஜீரியா மற்றும் உகாண்டாவை சேர்ந்த 48 வயதான Diana Namusoke மற்றும் 27 வயதான Johnson ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதையடுத்து Diana Namusoke தனது குடும்ப வாழ்க்கை விட்டு தனது தோழியுடன் இணைந்துள்ளார். அந்நாட்டில் இருந்தால் லெஸ்பியன் உறவு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மற்றும் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதி ஜேர்மன் நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

புகலிடம் கோரி Federal Office for Migration and Refugees (BAMF) இல் விண்ணப்பித்துள்ளனர்.

BAMF மற்றும் பெண்களின் மேல் முறையீட்டு உரிமை நீதிமன்றம், இவர்கள் இருவரையும் லெஸ்பியன்கள் என நம்பவில்லை. ஏனெனில் Namusoke மற்றும் Johnson ஆகியோர் “தங்கள் அனுபவங்களைப் பற்றிய இடைவெளியைப் பதிவு செய்யவில்லை, இதனால் இவர்களது புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.