புத்தளம் – சிலாபம் வீதியின் நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் நேர்ந்துள்ளது.
கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுள் 3 பெண்கள் உள்ளடங்குவதோடு, உயிரிழந்த மற்றையவர் வீதியோரம் நின்றுக்கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக டிப்பர் ரக வாகன சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.