தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சற்று முன்னர் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், மேலும் சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த அதே நபரே இவரது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.