கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபரின் பணப் பையில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை தந்திரமான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கொள்ளையிடப்பட்ட பணத்துடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு, மருதானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.