இன்றுள்ள வாழ்வியல் சூழ்நிலையில் பல்வேறு வகையான உணவுப்பழக்க வழக்கத்தை மாற்றம் செய்து., உணவுப்பழக்க வழக்கத்தை கையெடுத்து வருவதால் நமது உடலுக்கு பல விதமான தீங்குகள் ஏற்பட்டு இதன் காரணமாக நமக்கு பல நோய்கள் வருகிறது.
இதனால் ஏற்படும் பிரச்னையில் பெரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக வெளிநாடுகளின் பதப்படுத்தப்பட்ட உணவு., அதிகளவில் நீர் அருந்தாமல் இருப்பது மற்றும் மருந்து பொருட்களை அதிகளவில் உண்ணுவது போன்ற காரணங்கள் உள்ளது.
மலச்சிக்கலை குறைப்பதற்கு கடுக்காய் பொடியை அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை தே.கரண்டி அளவிற்கு சூடான நீரில் போட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவில் குணமாகும்.
மலச்சிக்கலை குறைப்பதற்கு திரிபலா பொடியை பயன்படுத்தலாம். இந்த பொடியை கடுக்காய்., நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் வகைகளை அரைத்து உருவாக்கலாம். இந்த பொடியாந்து நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கிறது. இதனை தினமும் இரவு வேலையில் அரை தே.கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.
மலச்சிக்கலை குறைப்பதற்கு உலர்ந்த அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்த பின்னர் காலையில் சாப்பிட்டு., அதற்கு பின்னர் பப்பாளி பழத்தை உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவில் குணமாகும்.
மலச்சிக்கலை குறைப்பதற்கு உளர் திராட்சை பழத்தை மாலை வேளைகளில் நீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து சிறு குழந்தைகளுக்கு 10 உலர் திராட்சையை கொடுத்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமாகும்.