அமெரிக்காவில் இரண்டு இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளியை 20 வருடங்களுக்கு பிறகு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ராசி ஹவ்லெட் மற்றும் J.B. பஸ்லி என்கிற 17 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி முதல் மாயமானார்கள்.
தோழியின் பிறந்தநாளுக்காக சென்ற இருவரும் சடலாக மறுநாள், பஸ்லியின் கார் பின்பக்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஒரு துப்பாக்கி தோட்டாவால் இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதும், அதற்கு முன்பு துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த வழக்கு சம்மந்தமாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்திலிருந்து டி.என்.ஏ பரிசோதனைகளை எடுத்தாலும் கூட, சம்மந்தப்பட்ட அந்த குற்றவாளியை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் சமீபத்தில் கோல் மெக்ரேன் என்கிற 45 வயது நபரின் உறவினர் ஒருவர், தங்கள் வம்சாவளி தொடர்பான டி.என்.ஏ குறிப்புகளை தனியார் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
அதிலிருந்து மெக்ரேன் டிஎன்ஏ, பஸ்லியின் உள்ளாடையில் படிந்திருந்த டி என்ஏ-உடன் ஒத்துபோயுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் சிறைக்காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.