என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீயே…. கதறும் பெண்!

பொள்ளாச்சியில் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணியாற்றும் பாலசந்திரன் என்பவர் பல பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை ஏமாற்றிய தகவல் அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே பொள்ளாச்சி திருநாவுக்கரசு விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதே பாணியில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில், பாலச்சந்திரன் தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லி இரண்டு முறை கர்ப்பமாக்கி அதை வலுக்கட்டாயமாகக் கலைக்கவும் வைத்துவிட்டான்.

நாட்கள் செல்ல செல்லதான் அவனது சுயரூபம் தெரிந்தது. என்னைப்போல, அவன் வேலைபார்க்கும் பேருந்தில சென்ற பல பெண்களை இப்படிச் செய்துள்ளான்.

அவனோடு பழகும்போது காதலிப்பதாக நம்பி அனுப்பிய அந்தரங்க குறுஞ்செய்திகள் மற்றும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறான் என இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பாலசந்திரன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசும் ஆடியோ கேட்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீயே என்று அந்தப் பெண் கதறும்போது, உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ… நான் இப்படித்தான்! உன்னைவிட இன்னொருத்தி அழகா இருந்தா, அவகூட போவேன். அவளவிட இன்னொருத்தி அழகா வந்தா அவகூட போவேன். இதுதான் நான்!” என்று அந்தப் பெண்ணின் சாதியைச் சொல்லி மிகவும் தரக்குறைவாக, வக்கிரமான வார்த்தைகளால் பேசுகிறார்.

இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், உடனடியாகப் புகாரைப் பெற்ற காவல்துறை, இரவோடு இரவாக பாலச்சந்திரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.