இந்தியாவில் கடனை திருப்பி கேட்ட சசிகலா என்ற பெண்ணை கணவர் உதவியுடன் கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஹாசனைச் சேர்ந்தவர் சசிகலா (28). இவர் தேஜு என்ற பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
கடனை திரும்பிக் கேட்ட சசிகலாவை, பீரேனஹள்ளி ஏரி லேஅவுட்டில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு தேஜு கூறியுள்ளார் . இதை நம்பி அங்கு சசிகலா சென்ற நிலையில், அங்கிருந்த தேஜு, தனது கணவர் ரமேஷின் உதவியுடன் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் இருவரும் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற நிலையில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆட்டோவை மடக்கி தேஜு மற்றும் ரமேஷ் ஆகியோரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
இருவரிடமும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.