உயிரைவிட முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்! கடைசி நிமிடத்தில் அதிசயம்

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ள சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின் தாயே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இந்தப் பெண்ணின் கணவர் புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கணவரின் தாய் உட்பட உறவினர்கள் குறித்த பெண் மீது குறை கூறி கொண்டே இருப்பதோடு, பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனை பொறுத்துகொள்ள முடியாமல் மனவேதனையடைந்த இந்த பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

ரயிலில் மோதும் இறுதிக்கட்டத்தின் போது பொலிசார் கடுமையாக போராடி இந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.காப்பாற்றப்பட்ட பெண் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.