தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது தாயின் காது ஒன்றைக் கடித்துத் துண்டாடினார்.
கடற்தொழில் செய்யும் அவர், நேற்றுமுன்தினம் தாயாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டார்.
ஆத்திரமடைந்த அவர் தாயாரின் காது ஒன்றைக் கடித்தார். காது துண்டான நிலையில் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாயாரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் அவரது மகனைக் கைது செய்தனர்.இளைஞன் நேற்றுத் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த மன்று சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.