பெரும்பாலும் பலரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது அடிவயிற்று சதையை குறைக்க முடியாமல் கஷ்டப்படுவதுண்டு.
கொலஸ்ட்ரால் படிய ஆரம்பிக்கும் போது பல பிரச்சினைகளை உண்டாக்கி விடுவதுண்டு.
இதனால் இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு இயற்கையாகவே ரத்தம் குறைந்திடும்.
அதோடு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லப்படும் பாதைகளில் தடையிருப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதற்காக அன்றாடம் கடினமாக உடற்பயிற்சிகளையும் கடினமான டயட்களையும் மேற்கொள்ளுவதுண்டு.
அந்தவகையில் நமது முன்னோர்கள் பயன்பாட்டில் இருந்து வந்த கொலஸ்ட்ராலை மிக எளிமையான வழியில் குறைக்க இந்த திரிகடுகு சூரணம் நன்கு உதவுகிறது.
தற்போது இதனை வைத்து எப்படி அடிவயிற்று சதையை குறைக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு
- திப்பிலி
- சுக்கு
- தேன்
தயாரிப்பு முறை
முதலில் மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சமமான அளவு எடுத்து கொண்டு வாணலில் 2 முதல் 3 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
அடுத்து இதனை பொடியாக அரைத்து கொண்டு காற்று புகாத பாத்திரத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
தினமும் அரை ஸ்பூன் இந்த பொடியுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் விரைவில் குறையும்.