குடும்பத்தை சுனாமியில் இழந்த பிரபல இலங்கை பெண்!

Dr Sonali Deraniyagala, பிரித்தானிய பொருளியலாளரான தனது கணவர் ஸ்டீபன், குழந்தைகள் தனது பெற்றோர் என குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்த போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

2004ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ஆம் திகதி, யாலா தேசிய பூங்காவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும்போது, Sonali கடல் அலைகள் 30 அடி உயரத்திற்கு எழும்பி தங்களை நோக்கி வருவதைக் கண்டார்.

குழந்தைகளுடன் ஜீப் ஒன்றில் ஏறி உயிர் பிழைக்க ஓடும்போதுதான் மூளைக்கு உறைத்தது, தங்கள் பெற்றோரை ஹோட்டலிலேயே விட்டு வந்து விட்டோம் என்பது.

ஆனால் ஜீப் அவர்களைக் காப்பாற்றவில்லை, அலைகள் இழுத்து புரட்டி வீசியதில் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார் Sonali.

உடலெல்லாம் காயம், நெஞ்சில் யாரோ பாறையைத் தூக்கி அடித்தது போல் ஒரு வலி. சுமார் 2 மைல் தூரம் வெள்ளம் அடித்துச் செல்ல, கண் விழிக்க முடிந்தபோது ஒரு மரத்தின் கிளை கண்ணில் பட, அதைப் பிடித்துக் கொண்டார் Sonali.

ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கணவரையும் காணவில்லை, குழந்தைகளையும் காணவில்லை.

பல நாட்கள் கழித்துதான் அவர்களது உடல்கள் கிடைத்தன, மகனின் உடலை அடையாளம் காண முடிந்த அவரால் மற்றவர்களின் உடலை DNA சோதனை மூலம்தான் கண்டுபிடிக்க முடிந்தது. லண்டனிலுள்ள வீட்டுக்கு திரும்பினாலும், உடல் காயம் ஆறிய அளவுக்கு மனக்காயம் ஆறவில்லை.

பல முறை தற்கொலைக்கு முயன்ற Sonaliயை, தன் மனதிலுள்ளதையெல்லாம் புத்தகமாக எழுதச் சொன்னார் ஒரு நண்பர்.

அப்படி Sonali எழுதிய புத்தகம்தான் Wave. அந்த புத்தகத்தை படித்தார், ஹாரி பாட்டர் மற்றும் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர்களான Killing Eve மற்றும் Mrs Wilson ஆகிய தொடர்களில் நடித்த பிரபல நடிகையான Fiona Shaw.

அந்த புத்தகத்தை எழுதிய பொருளியல் பேராசிரியர் Dr Sonali Deraniyagalaவை சந்திக்க விரும்பினார் Fiona.

இருவரும் சந்தித்தார்கள், மனதுக்குள் ஏதோ மின்னலடித்தது. அன்று முதல் அவர்களுக்குள் ஒரு பிரிக்க முடியாத நட்பு, நட்பு எப்போது திருமணத்தில் கொண்டு விட்டது என்று அவர்களுக்கே தெரியவில்லை.

மறக்க முடியாமல் தவித்த பயங்கரங்கள், வாழாமலே தொலைந்து போன இளமை, தனிமை, எதையும் யோசிக்காமல் வேலை வேலை என்று ஓடிய நாட்கள் என அனைத்தையும் சற்று மறந்து தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ முடிவு செய்தார்கள் இருவரும்.

இப்போது Fionaவும் Sonaliயும் திருமணம் செய்து கொண்டு லண்டனிலுள்ள ஒரு வீட்டின் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கடவுளும் ஒரு விபத்தும் தனக்கு கொடுத்த உறவு Sonali என்கிறார் Fiona.