-
மேஷம்
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரததில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். -
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
-
கடகம்
கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அழகு, இளமை கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: இன்றும் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. போராட்டமான நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவதுநல்லது. யாருக்காகவும் ஜாமீன்,கேரண்டி கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: எந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகா
ரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள். -
தனுசு
தனுசு: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
-
மகரம்
மகரம்: இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துகொள்வது நல்லது. இரண்டாவதுமுயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் உத்யோ
கத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். -
கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள்வந்துப் போகும். வாகனத்தைசரி செய்வீர்கள்.வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவா
கும். திறமைகள் வெளிப்படும் நாள். -
மீனம்
மீனம்: உங்களின் இலக்கைநோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.