தேர்தலுக்கு முன்பே இப்படியொரு சோகமா..?

மக்களவைத் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் 27 பறக்கும் படை குழுவும், விதிமுறைகள் கண்காணிப்புக் குழுக்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரை அடுத்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் என்ற பகுதியில் வட்டாட்சியர் சிவா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்து காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் பணம் இருந்தது. இதனை பார்த்த பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது ரூ.4 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்த நபர் யார் என்று விசாரணை செய்தபோது முருகன் என்பவர் தெரியவந்தது. இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தம்பி ஆவார்.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், காட்டுமன்னார் கோவிலில் இருந்து கடலூருக்கு வந்தாகவும், இந்த பணம் காண்ட்ராக்ட் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு ஆவணங்கள் இதுவரை காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.