வாட்ஸ்ஆப்பில் இனி யாரும், யாரிடமும் ஏமாற முடியாது!

சமூக வலைதளத்தில், வாட்ஸ் ஆப் பலருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. நாளுக்கு நாள் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் செய்து வருகிறது.

தற்போது மொபைல்போன் என்பது அனைவரின் உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நவீன உலகத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள வாட்ஸ்ஆப் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியை வாங்கியதில் இருந்து அப்த செயலியில் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தநிலையில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களாக வரும் படங்களின் உண்மைத்தன்மையை சோதிக்க உதவும் வகையில் Reverse Image Search எனும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் உள்ள இந்த வசதியின் மூலம் வாட்ஸ்ஆப்பில் வரும் படங்களை சோதிக்க முடியும். இதன் மூலம் தேடப்படும் படம் முன்கூட்டியே இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா? எப்போது பகிரப்பட்டுள்ளது, எதற்காகப் பகிரப்பட்டுள்ளது? யார் பதிவேற்றியது என பல விஷயங்களை இந்த Reverse Image Search எனும் புதிய வசதி மூலம் அறிய முடியும்.