திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி – கொள்ளிடம் ஆறுகளின் இடையில் தீவு போன்று அமைந்திருக்கும் பகுதியில் திருவரங்கம், திருவானைக் காவல் எனப்படும்.
திரு ஆனைக்கா என்ற இரு பெரும் தலங்கள் அமைந்துள்ளன. இதில் திரு ஆனைக்கா பஞ்ச பூதத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இது, பஞ்ச “கா’ தலங்களிலும் ஒன்றாகும். (மற்றவை திருக்கோலக்கா, திருநெல்லிக்கா, திருகுரக்குக்கா, திருகோடிகா)
நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப திருவானைக்கா அப்பு தலமாக (நீர்) விளங்குகிறது. இங்கே இறைவன் நீர் வடிவமாக காட்சியளிக்கிறான்.
இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை “செழுநீர்த்திரள்’ என்று அப்பர் பெருமான் போற்றுகிறார். இத்தலம் கஜாராண்யம், ஜம்புகேசுவரம், வெண்நாவல் வனம், ஞான சேத்திரம், ஞானத்தலம், ஞானபூமி, அமுதேசுவரம் என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் இன்று இந்து சமய அறநிலையத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு சீர்கெட்டு வருகிறது.
மூவர் பாடல் பெற்ற திருத்தலத்தலமான திருஆனைக்கா கோவிலில் இன்று (19-03-2019) உச்சிகாலம் அம்பாள் சுவாமி சன்னதிக்கு வரும் முன்பு, மேற்கு கோபுரத்திலிருந்து கொடிமரத்திற்கு உள்ளே வேகமாக காரில் வந்த இந்து சமய அறநிலையத்துறையினர் கோவிலுக்கு உள்ளே காரை நிறுத்தியுள்ளனர்.
இன்னோவா கார் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுவருகிறது. திருக்கோவில் என்பது மதிப்பதேற்கே அன்றி சீர்கேட்டிற்கு அல்ல என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.