நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் தங்கள் கூட்டணி, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை என பரபரப்பாக உள்ளனர்
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில். சிம்புவின் தம்பி குறளரசன் பெயரில் ட்விட்டரில், எங்க அப்பாதான் அடுத்த முதல்வர் என .பதிவு வெளியானது. மேலும் தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் குறளரசன் பெயரில் ட்வீட் வெளியானது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் மகன் குறளரசன், பதிவு வெளியிடப்பட்டிருந்தது என்னுடைய ட்விட்டர் கணக்கு இல்லை. இது போலியான ட்விட்டர் கணக்கு என விளக்கம் அளித்தார்
அதை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, என் மகன் குறளரசனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மர்மநபர்கள் சிலர் போலி டுவிட்டர் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.அதில் தவறான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். எனக்கோ என் மகன் குறளரசனுக்கோ எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு இல்லை. சர்ச்சையை கிளப்பிய அந்த பதிவில் என் மகனுக்கு சம்பந்தமில்லை.
மேலும் அந்த போலி கணக்கு வைத்திருப்பவர்கள் யாரென்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளேன் என டி ராஜேந்தர் ஆவேசமாக கூறியுள்ளார்.