ஷாம்பு வாங்கணும் காசு தாங்க.! காசா…. மனைவியை துவைத்தெடுத்த கணவன்.!!

இந்தியாவில் இருக்கும் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பாவ்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஞாயிறுக்கிழமையன்று பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது கணவரிடம் குளிப்பதற்கு ஷாம்பு வேண்டும் அதற்கு பணம் தாருங்கள் என்று கூறினேன். இதனை கேட்ட எனது கணவர் ஆத்திரமடைந்து என்னை சுவற்றில் தள்ளி விட்டு அடித்தார்.

அவர் என்னை கடந்து சென்றதும் அவசர உதவி எண்ணான 181 க்கு தொடர்பு கொண்டு பேசிய போது., அவர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரிடம் மனைவியை இவ்வாறா நடத்துவது என்று அவரை கண்டித்து., முறைப்படி நடந்துகொள்ளும் படி எச்சரித்து விட்டு சென்றனர்.

இதற்கு அடுத்தபடியாக அந்த பெண் அதிகாரி வெளியேறியதும்., வீட்டை விட்டு என்னை வெளியேறுமாறு கூறினார். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.