நரகத்தின் கதவு என்று அழைக்கப்படும், நெருப்பு குழியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நரகத்தின் கதவு துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ளது. இதனை மிகப்பெரிய எரிவாயுக் குழி என்று அழைக்கின்றனர். இந்த நரகத்தின் கதவை முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்து உள்ளனர்.
துர்க்மெனிஸ்தான் நாட்டின், காரகும் பாலைவனத்தில் காணப்படும் இந்த நெருப்புக்கு குழி இயற்கையாக உருவானது என்று ஒரு தரப்பினரும், எண்ணெய் எடுக்க போர் போடும் போது உருவானது என்று ஒரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
இந்த நெருப்பு குழி சுமார் 70 மீட்டர் சுற்றளவும் 30 மீட்டர் ஆழமும் கொண்டது. இந்த நெருப்புகுழியின் வெப்பநிலை சுமார் 1000 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த குழிக்கு நரகத்தின் கதவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நரகத்தின் கதவை முதல் முறையாக மேலிருந்து படம் எடுத்து உள்ளனர் . அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.