தொடர்ந்து 16 மணிநேரம் விமானம் இயக்கும் பெண் விமானி!

தனது 17ஆவது வயதில் விமான பயிற்சியை தொடங்கி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஏர் இந்தியாவில் விமானியாக பணிக்கு சேர்ந்த அனி திவ்யா, தனது 21ஆவது வயதிலேயே உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான போயிங் 777ஐ இயக்கியதாக கூறுகிறார்.

“நான் முதல்முறையாக விமான பயிற்சிக்காக விமானத்திற்குள் செல்வதற்கு முன்புவரை, நான் ஒருமுறைகூட விமானத்தில் பயணியாக கூட பயணித்ததில்லை.

இருப்பினும், என்னுடைய மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு, துளியும் பயமின்றி, உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.