இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோதிடர்! உச்சகட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. முன்னணி கதாநாயகர்களுக்கு சமமாக கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் தற்போது, தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தளபதி 63 படத்தில் நயன்தாராவின் சம்பளம் 6 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் நடித்து வருகின்றனர்.

மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் அவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர என்று கூறப்படுகிறது.
அவரின் ஆஸ்தான ஜோதிர் நயன்தாராவிடம் ‘உங்களுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக கூறியுள்ளார். இதைகேட்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளாராம் நயன்தாரா.