இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் நகரில் திமுக காரியாலயத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம், ” திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
மேலும், ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும். நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
அதிமுகவின் அறிக்கைகள் கேலிக்கூத்தாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தான் தமிழிகம் முன்னேறும். மேலும், திமுக தலைவரான தளபதி முக ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தான் தொழில்வளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெறுக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெண்களின் பாதுகாப்பிற்கும் நாங்கள் தான் முக்கியத்துவம் கொடுப்போம்.” என கூறியுள்ளார்.