கணவனை நம்பி வாங்கிய கடன்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்துள்ள கோணப்பேட்டையை சார்ந்தவர் உதயகுமார் (39). இவரது மனைவியின் பெயர் நீலா (வயது 33). இவர்கள் இருவருக்கும் பவதாரணி என்ற மகள் இருக்கிறார்.

பெங்களூரில் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்த உதயகுமார்., விடுமுறையில் ஊருக்கு வந்திருந்துள்ளார். பின்னர் விடுமுறை தினம் நிறைவு பெற்றும் பணிக்கு செல்லாமல் இல்லத்திலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்., வெளிநாட்டிற்கு செல்வதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட நீலா எப்படியாவது கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் சிறிது காலம் கஷ்டம் அடைந்தாலும் பின்னர் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி அவரிடம் இருந்த நிலம் மற்றும் வெளியே வட்டிக்கு கடன் என்று ரூ.5 இலட்சத்தை தயார் செய்து கணவரிடம் வழங்கியுள்ளார். இதனை வாங்கிய உதயகுமார் வெளிநாட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறி பெங்களூரில் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

உதயகுமார் வெளிநாடு செல்லாமல் பெங்களுரில் இருக்கும் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த நிலா., இது குறித்து அவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நீலா குழந்தைக்கு விஷம் வழங்கி., அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

வீட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இவர்களை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர்., மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்., பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.