ஹோலி கொண்டாட்டம்! கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதத்தால் பெரும் சோகம்!

சென்னை வேப்பேரி பகுதியில் ஹோலி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் அதற்காக தனியாருக்கு சொந்தமான இடத்தில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அங்கு குழந்தைகள், பெரியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஹோலி கொண்டாட்டத்திற்காக திரண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் அந்த இடத்தில ஷவரில் இருந்து தண்ணீர் விழுவது போல போலவும், அந்த தண்ணீர் முழுவதும் ஒரு தொட்டியில் நிரம்பியதும் அதில் இறங்கி விளையாடுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த தொட்டியில் இறங்கி பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கலர் பொடிகளை அனைவரின் மேடும் தூவி தண்ணீர் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் திடீரென தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஓடி சென்று மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மிகவும்

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஹோலி கொண்டாட்டத்தில் நேர்ந்த இந்த எதிர்பாராத விபரீதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.