இருமலை உடனடியாக விரட்ட இந்த பானத்தை குடிங்க.!

பொதுவாக மழைக்காலங்களில் பெரும்பாலும் காய்ச்சல்., தடுமால் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதியுற நேரிடும். சில நேரங்களில் அதிகளவு புகை பிடிப்பவர்களுக்கு திடீரென இருமல் அதிகளவில் ஏற்படும்.

இருமலை தடுப்பதற்கு பல முறைகள் இருந்தாலும்., இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால் அந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட வியலும்.

இருமலை தடுக்கும் பானம் செய்ய தேவையான பொருட்கள்:

பசும்பால் – 1 குவளை.,
தேன் – 1 தே.கரண்டி.,
முட்டையின் மஞ்சள் கரு – 1 எண்ணம்.

இருமலை தடுக்கும் பானம் செய்முறை:

பாலை எடுத்துக்கொண்டு முதலில் நன்றாக சூடுபடுத்தி., அதற்கு பின்னர் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இரண்டு நன்றாக சேர்ந்த பின்னர்., பாலை எடுத்து குடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.