ஆண்களை ஆபாச புகைப்படம் எடுத்து பணம் பறித்த பெரும் கும்பல்.!!

கோயம்புத்தூரில் இருக்கும் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்களை முகநூல் மூலமாக காதல் வலையில் விழ வைத்து., பண்ணை இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான., திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் பிரச்சனையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சனையின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்குள் நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியின் நிறுவனர் ரவி., அங்கு பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளார் என்ற சம்பவமானது வெளியாகி மீண்டும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்., பெங்களூரை சார்ந்த தொழிலதிபரான அப்துல் ரப் ஆரிப் என்பவர் வேலூரை சார்ந்தவர். இவரின் தாயார் வேலூரில் உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில்., தாயாரை கவனித்துக்கொள்வதற்கு நாளிதழில் விளம்பரம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த விளம்பரத்தின் மூலமாக அபிதா என்ற பெண்மணி அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் மூலமாக அந்த பெண் தன்னிடம் உதவியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறி., வேலூருக்கு நேரடியாக வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை ஏற்று வந்த அவரை சுமார் 10 பேர் கொண்ட கும்பலானது ஆட்டோவின் மூலமாக அழைத்து கொண்டு., காட்டுப்பகுதியில் வைத்து அரைநிர்வாணமாக்கி பெண்ணருகே இருக்கும் படி புகைப்படத்தை பதிவு செய்து சுமார் ரூ.3 இலட்சத்தை வாங்கி விட்டு சென்றுள்ளது.

இதனையடுத்து இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த விசாரணையில் ஆபிதா., தாரா என்ற இரண்டு பெண்கள் மற்றும் ஷாபுதீன்., கோவிந்தராஜ் போன்ற 11 கூட்டாளிகளை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சார்ந்த பல தொழிலதிபர்களிடம் இது போன்ற கையாடல் செய்ததும் தெரியவந்தது.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தொழிலதிபர்கள் வீட்டில் பணியாற்ற பெண்கள் அல்லது பணியாளர்கள் வேண்டும் என்று விளம்பரம் அளிக்கும் நபர்களை நோட்டமிட்டு அவர்களிடம் பழகி., பெண்கள் விஷயத்தில் பலகீனமான நபர்களை நோட்டமிட்டு அவர்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் பறித்தது தெரியவந்தது. மேலும்., இந்த சம்பவத்தில் மனதிற்கு பயந்த பல தொழிலதிபர்கள் காவல் நிலையத்தை நாடாமல் இருந்துள்ளார் என்றும்., இவர்களிடம் மேற்கொள்ளப்படும் தொடர் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..