வாட்ச்மேன் வேலை பார்க்கும் அளவிற்கு சென்ற பிரபல நடிகர்!

சினிமா நடிகர்கள் என்றாலே வருமானம் அதிகமாக இருக்கும். சினிமாத்துறையில் இருப்பவர்கள் பணக்காரர்களாக தான் இருப்பார்கள் என்பது மக்கள் மனநிலை. ஆனாலும் சினிமாவில் பிரபலமாக நடித்திருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே சிரமப்படும் நடிகர் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்தவகையில் ஒருவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் சவி சிது. பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலைக்கு செல்கிறார் சவி சிது.

இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த சில காலங்களாக எனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாததாலும், தனது பெற்றோர், மனைவி அனைவரும் இறந்துவிட்டதால் தொடர்ந்து தனிமையில் வாடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. வறுமையால் தவித்துவந்தேன்.

எனக்கு நேர்ந்த வறுமையின் காரணமாகவே நான் வாட்ச்மேன் வேலைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் தற்போதும் இருப்பதால், கண்டிப்பாக எப்படியாவது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு நடிப்பேன் என கூறியுள்ளார்.