ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன.
இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.
அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.