நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு நடத்தி 50 பேரை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தாயர் என தன்னுடைய குடும்பத்தை இழந்த இளம்பெண் கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததோடு, 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த ப்ரெண்டான் டாரன்ட் (28) என்கிற நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் போது பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹுசைன், அவரது மனைவி கரம் பிபி மற்றும் அவர்களது மகன் ஜீஷான் ராசா ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தன்னுடைய பெற்றோர் கொல்லப்பட்டது குறித்து பேசியிருக்கும் மரியா குல், ‘முதலில் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அது ஒரு உதாரணமாக இருக்காது என்பதை உணர்ந்தேன்’.
அந்த நபர் மனம்திருந்தி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன். அவர் செய்தது தவறு என்பதை பார்க்கவும், இஸ்லாம் மதம் எவ்வளவு அழகானது என்பதை உணரவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.