திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள கல்பூண்டி கிராமத்தை சார்ந்தவர் நித்யா. இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக பணி நிமித்ததின் காரணமாக., அங்குள்ள வேறு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்குள்ள ஆரணியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்., பணியின் காரணமாக அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்குள்ள அக்கம்பக்கத்தில் இருக்கும் மாணவர்களை அழைத்து டியூஷன் சொல்லித்தருவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்துக்கு பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை டியூஷன்க்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த சமயத்தில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி., அவர்களை நடனமாடச்சொல்லி அவர்களுக்கு பாலியல் தொல்லைகளை வழங்கி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது நித்யாவின் அலைபேசியில் அதனை புகைப்படமும் எடுத்து வைத்துள்ளார். இதனை கண்ட நித்யாவின் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இது குறித்து அவரை எச்சரித்துள்ளார்.
இதனை கண்டுகொள்ளாத நித்யா மீண்டும் தகாத செயலில் ஈடுபட்டு வரவே., இது குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவலை மாவட்ட ஆட்சியருக்கு விபரமாக அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்., உடனடியாக சமூக நல பாதுகாப்பு அலுவலகர்களுக்கு தகவலை தெரிவித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன் வழக்குப்பதிவு செய்து., ஆசிரியை நித்யாவை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.