ரயிலின் முன்பாகக் குதித்து இளைஞன் தற்கொலை…!!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று காலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட இளைஞன் 18 வயது மதிக்கத்தக்கவரென்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள போதிலும், குறித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.