சிகரெட் பாவனைக்கு தடை….. அதிரடியாக தீர்மானம்!

வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்தீபனால் கடந்த மாதம் நடைபெற்றருந்த சபை அமர்வில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அடுத்து வருகின்ற அமர்வில் அதனை தீர்மானமாக எடுக்கலாம் என்றும் சபை உறுப்பினர்களால் கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் இவ்விடயம் ஆரயபட்டதுடன் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் சிகரெட் பாவனையை தடைசெய்வது என ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.