தமாகா கட்சியில் இருவருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவித்து வருகின்றனர்.

அதிமுக போட்டியிட உள்ள 20 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் திமுகவும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மக்களவை தேர்தலோடு நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர் பட்டியலை அதிமுக மற்றும் திமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் அமமுகவும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தஞ்சை தொகுதியில் தமாகா வேட்பாளர் நடராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமாகா ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவராக ராமமூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட தலைவராக காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.