பாராளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணி முடிவுகள் எடுத்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளது.
இந்நிலையில், இன்று எடப்பாடி தேமுதிக சுதீஷுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தேமுதிகவுக்கு மொத்தம் நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருது நகர் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த் போட்டியிட இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதனை தனது ரசிகருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியள்ளார் கேப்டன்.
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அழகர் சாமி என்பவர் ’32’ ஆண்டுகளாக விஜயகாந்தின் ரசிகராகவும், அவரது ரசிகர் மன்றத்தில் தொண்டராகவும் பயணித்துள்ளார்.
15 வயது முதல் விஜயகாந்த் நற்பணி மன்றத்தின் துணை தலைவராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் வாழ்வின் பொருளாதார சோதனைகளின் போதும் ரசிகர் மன்றத்தை விட்டு கொடுக்காமல் பஸ் கண்டக்டராக இருந்து விஜயகாந்த் மன்றம் ஒன்றை துவங்கியுள்ளார்.
விஜயகாந்த் கட்சியை துவங்கிய போது அவருக்கு கிரீடமும்,செங்கோலும் அளித்து வியப்பிற்கு உள்ளாகியுள்ளார். இதன் பின்னர் திருமங்கலம் தொகுதியில் 2006 சட்டசபை தேர்தலில் அவரது அழகரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்பளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது விருது நகர் தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவித்து, பிரேமலதாதாவின் இடத்தை அவருக்கு கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார் விஜயகாந்த்.
தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி விருதுநகர் எனவே தானே தேர்ந்தெடுத்து கொடுத்ததால், அழகர் சாமி கண்ணீர் மல்க,” உண்மை தொண்டருக்கு கிடைத்த வாய்ப்பு” என நன்றி கூறியுள்ளார்.