படகு கவிழ்ந்து விபத்து 94 உயிர் பலி! பதறவைக்கும் வீடியோ!

ஈராக்கில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மொத்தம் 200 பேர் வரை நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

நேற்று உலகம் முழுக்க குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் விதமாக நவ்ரூஸ் பண்டிகையை கொண்டாடினர். இந்த பண்டிகை ஈரானில் புதிய வருடமாகவும் கொண்டாடப்படுகிறது.

இதை கொண்டாடுவதற்காக ஈரானில் மொசூலில் இருந்து டைகிரிஸ் நதியில் படகில் சென்ற மக்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். 80 பேர் வரை செல்லும் படகில் கூட்டம் காரணமாக 200 பேர் சென்று உள்ளனர்.

இந்நிலையில் மொசூலில் அந்த படகு செல்லும் போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே படகு அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது. படகு கவிழ்ந்து மக்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். படகு தலைகீழாக அப்படியே கவிழ்ந்ததில், நிறைய பேர் வெளியேற முடியாமல் அடியில் சிக்கினார்கள். 94 பேர் பலியானார்கள்.

200 பேரில் மீதம் இருக்கும் 54 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மீதம் இருக்கும் நபர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அங்கு தீவிரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.