கொலம்பியாவில் குடிபோதையில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உடலுறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கொலம்பியாவின் கலி பகுதியைச் சேர்ந்தவர் லா ஃபியரா என்ற 32 வயதுடைய பெண், தனது பார்ட்னருடன் குடி போதையில், ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை போல , தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டதால், அந்த பெண் திடீரென்று மயக்கமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.