கண்ணிமைக்கும் நொடியில் அண்ணன் கண்முன்னே நடந்த துடிதுடிக்கவைக்கும் துயரம்!

அம்பத்தூர் பகுதியில் பழைய நகராட்சி சாலையில் வசித்து வருபவர் மோகன்குமார். இவரது மகன்கள் ராகுல் மற்றும் கௌதம்.
இவர்களில் கௌதம் மதுரவாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராகுல் அரும்பாக்கத்தில் பிஏ சோசியாலஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று செங்குன்றம் பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்பொழுது அவர்கள் மேம்பாலம் அருகே சென்ற போது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து ராகுல் மற்றும் கௌதம் இருவரும் கீழே விழுந்தனர். இந்நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் சாலையில் விழுந்த கௌதம் மீது பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராகுல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண்ணெதிரிலேயே தம்பி தலை நசுங்கி உயிரிழந்ததை கண்ட ராகுல் அதிர்ச்சியடைந்து துடிதுடித்து போனார்.

மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த கௌதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.