நடக்காத விஷயங்களையும் நடத்திக்காட்ட…. டிப்ஸ்!

பூ வாடாமல் இருக்க:

மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.

மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க:

ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.

ஈ தொல்லை ஒழிய:

டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள், ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.

லெதர் பொருட்கள் பளபளக்க:

தோலில் செய்த எந்தப் பொருளையும், பாலில் நனைத்த துணியால் துடைத்தால், நல்ல பளபளப்பாகி விடும்.

உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க:

உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக, சொர, சொரப்பாக இருந்தால், மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள், பாத்திரம் பளிச்சென்று மின்னும்.

மாவு அரைக்கீறீர்களா.?:

மாவு மிஷினில் மாவு அரைப்பதற்கு முன், சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு வேண்டுமானாலும் அரைக்கலாம். நமக்கு முன்பு கம்பு, கேழ்வரகு, கோதுமை, பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம். மாவு சுத்தமாக இருக்கும்.

டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ் :

டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே (மனம் மாறி) மீண்டும் போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும், டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும், டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.

மூட்டைப்பூச்சி ஒழிய:

கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.

படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க:

படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க, தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து படங்களை துடைக்க வேண்டும்.