அதிரடி அறிவிப்பு! அரசியலில் களமிறங்கும் கலா மாஸ்டர்!!

சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடன இயக்குநராக இருந்தவர் பிரபல பெண் நடன இயக்குநர்களில் ஒருவரான கலா மாஸ்டர்.

ஆண்கள் அதிகம் இருக்கும் துறையான சினிமாத்துறையில் தனி ஒருவராக நின்று சாதித்துள்ளார். கலா மாஸ்டரை போலவே அவரது தங்கை பிருந்தா மாஸ்டரும் புகழ்பெற்ற நடன மாஸ்டராக இருக்கின்றார்.

திரைத்துறையிலிருந்து திருமணத்திற்குப் பின்னர் ஒதுங்கியிருந்தார் கலா மாஸ்டர். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதை பல எபிசோட்களாக நிகழ்த்தினர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் புகுந்துள்ளார். இன்று கலா மாஸ்டர் தன்னை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டார்.

இதுகுறித்து அவர், ” ஒரு இயக்கம் அல்லது தலைவர் என்றால் முதலில் அவரை நமக்கு பிடித்திருக்க வேண்டும். அந்த வகையில் தினகரன் எனக்கு மிகவும் பிடித்தவர். 30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் திறம்பட செய்து முடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.