தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். மேலும் அதனை தொடர்ந்து அவர், வித்தியாசமான பல கதாபாத்திரங்களில், பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் சமூகத்தில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.மேலும் தனது வெளிப்படையான கருத்துக்களால் பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சித்தார்த் பிரதமர் நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் குறித்துக் கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓமுங் குமார் இயக்கத்தில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அதனை சந்தீப் சிங் தயாரித்துள்ளார். மேலும் இதில் நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
இந்நிலையில் இந்த டிரைலர் குறித்து நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில்,‘பிரதமர் நரேந்திரமோடி ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைத் தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித் தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான தந்திரம் போல தெரிகிறது.
#PMNarendraModiTrailer does not show how #Modiji won India’s Independence by single handedly wiping out the British Empire. Looks like another cheap trick by the sickular, libtard, commie, naxals and of course that Nehru. #IstandwithModi
— Siddharth (@Actor_Siddharth) 21 March 2019
PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது என்னுடைய மனது குழப்பம் அடைகிறது. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை. உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்து விடலாம். ஆனால், வரலாற்றையே மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது’ என தெரிவித்துள்ளார்.
Seeing the honesty of our film makers when making these “Biopics” like #PMNarendraModi, my mind boggles at how much goldwashing is going to happen in the many #Jayalalithaa based films coming our way. It’s forgivable to not know your history, unforgivable if you try to change it!
— Siddharth (@Actor_Siddharth) 21 March 2019